தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மின்கம்பி உரசியதில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2026, 7:19 pm

குளச்சல் அருகே அலங்கார வளைவு அமைக்கும் போது மின்கம்பி உரசியதில் தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் தேவாலயம் ஒன்றில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் திருத்தல குடும்ப விழாவிற்காக பீச் ரோடு ஜங்ஷனில் அலங்கார வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தக்கலை , கொல்லன்விளையைச் சோ்ந்த கோபி (71) அலங்கார வளைவு அமைக்கும் போது எதிா்பாராமல் அவரது இடது கால் மின் கம்பியில் உரசியதாம்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.