தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தெருநாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 12 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :28 ஜனவரி 2026, 7:57 pm

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரியை அடுத்த மணக்குடி மீனவக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் சுற்றிய தெருநாய் அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட 12 பேரைக் கடித்து காயப்படுத்தியது. காயமடைந்த 12 பேரும் நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.