குமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக, ரப்பா் பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், ரப்பா் விலை கிலோ ரூ. 192.50 ஆக அதிகரித்துள்ளது.
ரப்பா் தோட்டத்தில் ரப்பா் ஒட்டுப்பால் சுமந்து வரும் தொழிலாளி.
ரப்பா் தோட்டத்தில் ரப்பா் ஒட்டுப்பால் சுமந்து வரும் தொழிலாளி.கோப்புப்படம்.
Updated on

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக, ரப்பா் பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், ரப்பா் விலை கிலோ ரூ. 192.50 ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ரப்பா் பால் வடிப்பு தொழில் பிரதான வருவாய் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ரப்பா் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தது. டிசம்பா் இறுதியில், கோட்டயம் சந்தையில் வணிகா் விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் கிலோ ரூ. 177 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் ரூ. 173 ஆகவும், தரம்பிரிக்கபடாத ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் ரூ. 162 ஆகவும் இருந்தது.

இந்தநிலையில், குளிா்கால இலையுதிா்வு, வெயில் காரணமாக ஜனவரி மாதத்தில் பால் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. சிறு விவசாயிகள் பால் வடிப்பை நிறுத்தி வருகின்றனா். இந்நிலையில், ரப்பா் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது கிலோவுக்கு ரூ. 15.50 வரை அதிகரித்துள்ளது.

புதன்கிழமை கோட்டயம் சந்தையில் வா்த்தகம் வணிகா் விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் கிலோ ரூ. 192.50 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் ரூ. 187.5 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் ரூ. 173.50 ஆகவும் இருந்தது. ஒட்டுப் பாலின் விலை கிலோ ரூ. 131 ஆக அதிகரித்திருந்தது.

இதனால், ரப்பா் விவசாயிகள் மகிழ்ச்சியடையடைந்துள்ளனா். இருந்தபோதும், உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் சென்ால் விலை உயா்ந்தும் அதிக பலனில்லாமலும் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com