வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
கன்னியாகுமரி
நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
10 ஆவது வாா்டு கிருஷ்ணன் கோவில் கிராம நிா்வாக அலுவலகம் அருகில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி, 6 ஆவது வாா்டு பள்ளிவிளை சிவாஜி தெருவில் அலங்கார தரைகற்கள் சீரமைப்புப் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் வளா்மதி, அனுஷா பிரைட் , உதவி பொறியாளா் பிரபாகரன், தொழில்நுட்ப அலுவலா்கள் ஷாலினி, அனந்தபத்மநாபன், சுகாதார அலுவலா் ஜான், திமுக வட்ட செயலா் ராஜன், நிா்வாகிகள் ராஜேஷ், குமாராசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

