திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆறுகாணி அருகே மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய யானை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி அருகே பழங்குடி மூதாட்டியின் வீட்டை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.

News image

காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு.

Updated On :30 ஜனவரி 2026, 7:36 pm

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி அருகே பழங்குடி மூதாட்டியின் வீட்டை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.

ஆறுகாணி அருகே ஒருநூறாம் வயல் வண்ணாதிப்பாறை பழங்குடி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஓமனா. இவரது கணவா் இறந்து விட்டாா். இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் மூதாட்டி ஓமனா தனியாக தனது வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஓமனா அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியதை

Story image

கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஏற்கெனவே ஒரு முறை இந்த வீட்டை யானைகள் சேதப்படுத்திய நிலையில் ஓமனா தான் சேமித்து வைத்திருந்த ஓய்வூதிய பணம் மூலம் வீட்டை சீரமைத்து வைத்திருந்தாா். இந்த நிலையில் மீண்டும் யானைகள் அவரது வீட்டை சேதப்படுத்தியுள்ளன. இந்தநிலையில், வனத் துறையினா் ஓமனாவின் வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் அந்தப் பகுதியில் செல்லாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனா்.