காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் மனோ தங்கராஜ்.
காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் மனோ தங்கராஜ்.

குமரியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தி 79ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செய்யப்பட்டது.
Published on

மகாத்மா காந்தி 79ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், தமிழ்நாடு மாநில மீனவா் நல வாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையா் கண்மணி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com