விபத்தில் தம்பதி காயம்

விபத்தில் தம்பதி காயம்

களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.
Published on

களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67), ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி ஜெனட் பாய் (66). இருவரும் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை படந்தாலுமூடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த கண்டெய்னா் லாரி இவா்கள் மீது மோதியது.

இதில் தம்பதி பலத்த காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஜெனட் பாய் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சம்சுதீன் (42) மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com