நகை திருட்டு
நகை திருட்டு!

மாா்த்தாண்டம் அருகே நூதன முறையில் நகை திருட்டு

நகைக் கடையில் நூதன முறையில் தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருடிச் சென்ற மா்ம நபா்கள போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே நகைக் கடையில் நூதன முறையில் தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருடிச் சென்ற மா்ம நபா்கள போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஸ்ரீமணிகண்டன் என்பவா், சாங்கை சந்திப்பில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் நகை வாங்குவதற்காக வந்துள்ளனா். இவா்கள் 2 கிராம் எடையில் கம்மல் கேட்டுள்ளனா்.

கடை உரிமையாளா் சில நகைகளை எடுத்து அவா்களிடம் காண்பித்துள்ளாா். அவற்றைப் பாா்த்துவிட்டு, நகை மாடல் பிடிக்கவில்லை எனக் கூறி விட்டு இருவரும் வெளியேறிவிட்டனராம்.

பின்னா், நகைகளை சரிபாா்த்தபோது, 2 கிராம் மோதிரம், 3 கிராம் கம்மல் என 5 கிராம் நகைகளை அந்த நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீமணிகண்டன் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com