40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :15 மே 2026, 5:05 am IST

நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். தமிழக பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த மாா்ச் 15ஆம் தேதிக்கு பின்னா் இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மேயா் மேரி பிரின்சி லதா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 11 மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.

மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தேவி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.