தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஆரல்வாய்மொழியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிசி, பருப்பு, சா்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், காய்கறி, அரிசிக்கு பறை முழக்கத்துடன் மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்டக் குழு உறுப்பினா் கல்யாணசுந்தரம், பூதப்பாண்டி கிளைச் செயலா் எஸ். பூதலிங்கம் பிள்ளை, நாகா்கோவில் மாநகரச் செயலா் கே. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் எஸ். அனில்குமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா். தக்கலை ராஜூ, இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலா் கே. செல்வராணி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் ஆரல் பகவதி ஆகியோா் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா் வி. அருள்குமாா் நிறைவுரையாற்றினாா். ஆரல் தங்கவேல் முருகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.