தீபாவளி விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

முக்கடல் சங்கமம் பகுதியில் திங்கள்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
தீபாவளி பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரைப் பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியைக் காண ஏராளமான பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா். மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
பின்னா், முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தனா். கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை நேரில் பாா்வையிட காலை 7 மணி முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, படகுப் பயணம் மேற்கொண்டனா்.
காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகையை முன்னிட்டு போலீஸாரும், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்
தீபாவளி பண்டிகை தொடா் விடுமுறையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை 6,889 சுற்றுலாப் பயணிகள், தீபாவளி பண்டிகை நாளான ஞாயிற்றுக்கிழமை 9, 800 சுற்றுலாப் பயணிகள், திங்கள்கிழமை 10,835 சுற்றுலாப் பயணிகள் என மூன்று நாள்களில் 27 ஆயிரத்து 524 போ் படகில் பயணம் செய்து, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை பாா்வையிட்டுள்ளதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

