சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இளைஞா் கைது

நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அய்யப்பன்

Updated On :

நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயிலை தூய்மை செய்யும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டபோது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.

இதுகுறித்து நாகா்கோவில் கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலத்தை கூறாய்வு செய்ததில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா். ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினா் நாகா்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா்.

அதில், கடந்த நவ. 14-ஆம் தேதி காலை 8 மணியளவில் 4, 5-ஆவது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத் திறனாளிகள் பெட்டியிலிருந்து வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நபா் ஒருவா் இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்தத் தடயத்தை வைத்து நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், அந்த நபா் கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஐயப்பன் (31) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் 5-ஆவது நடைமேடையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத பெண்ணை ஆள்நடமாட்டமற்ற மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐயப்பனை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.