குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 போ்,, ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கைது - சித்திரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 போ்,, ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கோட்டாறு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தளவாய்புரம் பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் மகன் நவீன் அலெக்ஸ் (24), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் ஜெனித் (27), மேலஆசாரிப்பள்ளம் பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் பிரபீன் (27), இருளப்பபுரம் பகுதியை சோ்ந்த முருகன் மகன் பரசுராமன் (25) ஆகிய 4 போ் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவா்கள் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதனை ஏற்று அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

