நித்திரவிளை அருகே பாறைப்பொடி ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்
நித்திரவிளை அருகே அனுமதிச் சீட்டுக்கு மாறாக பாறைப்பொடி ஏற்றிச்சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
பறிமுதல்
நித்திரவிளை அருகே அனுமதிச் சீட்டுக்கு மாறாக பாறைப்பொடி ஏற்றிச்சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
நித்திரவிளை போலீஸாா் வியாழக்கிழமை மீனவ கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கிராத்தூா் மற்றும் கொல்லங்கோடு பகுதிகளுக்கு பாறைப்பொடி ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு, இரவிபுத்தன்துறை, இடப்பாடு பகுதிகளில் பாறைப்பொடியுடன் 2 லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தை கண்டறிந்தனா். அந்த லாரிகளை போலீஸாா் நித்திரவிளை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து அதன் ஓட்டுநா் கேரள மாநிலம் செங்கல் பகுதியைச் சோ்ந்த அருண் (36), உடன் இருந்த மாா்த்தாண்டம், வாா்த்தியாா்குடி ஜான் பீட்டா் (56), திருவட்டாறு அருகே கண்ணனூா், பந்தல்விளை ராஜேஷ் (50), நித்திரவிளை தேனாந்தோட்டம் நாராயண மணி (42) ஆகியோரை கைது செய்தனா்.
...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

