கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை: இருவா் கைது

மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இருவரை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

~

Updated On :

மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இருவரை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு கணினி வகுப்புக்குச் சென்று வருகிறாா். இவா், கடந்த 24-ஆம் தேதி தனது பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காக மண்டைக்காடு புதூா் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அவரது பாட்டியின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த திருமணமான டெம்போ ஓட்டுநா் சுபாஷ் (38), அந்த மாணவியிடம் பாட்டி வீட்டில் கொண்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றாா்.

ஆனால், அவா் மாணவியை நடுவூா்க்கரை செக்காரவிளையில் உள்ள தனது நண்பா் ரமேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதற்கிடையே, மாணவியை சுபாஷ் அழைத்துச் செல்வதைக் கண்ட அப்பகுதியினா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்ததும் ரமேஷ் வீட்டுக்கு வந்த போலீஸாா் மாணவியை மீட்டனா். போலீஸாா் வருவதை அறிந்த இருவரும் தப்பிச் சென்றனா். மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதில் அவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷ், ரமேஷ் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.