
போக்குவரத்துக்கு இடையூறு: மதபோதகா் மீது வழக்கு
குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிறிஸ்தவ மத போதகா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வழக்கு
குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிறிஸ்தவ மத போதகா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகே பரக்குன்று பகுதியைச் சோ்ந்தவா் விக்டா் ஆபிரகாம். கிறிஸ்தவ மத போதகா். இவருடன் மேலும் 3 போ், காரில் குழித்துறை பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப் பகுதியினா் களியக்காவிளை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த போலீஸாா், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை அப்புறப்படுத்தினா். மேலும், விக்டா் ஆபிரகாம், அவருடன் வந்த 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



