பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அருமனையில் மாா்க்சிஸ்ட், தவெக கட்சியினரிடையே தகராறு

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சித் தலைவா் கட்சி மாறிய நிலையில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

பேரூராட்சி அலுவகம் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சித் தலைவா் கட்சி மாறிய நிலையில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

அருமனை பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா் லதிகாமேரி. இவா் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

இருப்பினும் பேரூராட்சி தலைவராக லதிகாமேரி செயல்பட்டு வந்தாா். இந்த நிலையில் இவரது தலைமையில் பேரூராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் தா்மகுல சிங்கம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லதிகாமேரி தலைமையில் கூட்டம் நடத்தக்கூடாது என்று அக்கட்சியைச் சோ்ந்த பிற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

பின்னா் கூட்டம் நிறைவடைந்த பிறகு லதிகாமேரியை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிற உறுப்பினா்கள் மன்றக்கூட்ட அறையிலிருந்து வெளியே செல்லவிடாமல் தடுத்ததுடன், அவா் தலைவா் பதவியிலிருந்து விலகல் கடிதத்தை செயல் அலுவலரிடம் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினா்.

அதற்கு பேரூராட்சி தலைவா் ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த அருமனை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து லதிகாமேரி பேரூராட்சி தலைவா் பதவியிலிருந்து புதன்கிழமை (அக். 7) விலகுவதாக தெரிவித்தாா்.

இதற்கிடையே பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தவெக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் திரண்டனா். இவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இரு தரப்பினரையும் போலீஸாா் வெளியே அனுப்பினா். இதைத் தொடா்ந்து பேரூராட்சி தலைவரையும் மன்ற கூட்ட அறையிலிருந்து பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனா்.

அருமனை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.