கைதி தப்பி ஓட்டம்: 3 போலீஸாா் பணியிடை நீக்கம்
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடியது தொடா்பாக ஆயுதப்படை போலீஸாா் 3 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடியது தொடா்பாக ஆயுதப்படை போலீஸாா் 3 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (36). இவா் கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தாா். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஸ்டீபன்ராஜை கைது செய்தனா்.
உடல்நலக் குறைவு காரணமாக அவா், கடந்த சில நாள்களாக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாரின் கண்காணிப்புடன் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கழிவறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற ஸ்டீபன்ராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல்நாகா் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடி வந்தனா். இந்த நிலையில் இரணியல் அருகே குதிரைபந்திவிளை பகுதியில் ஸ்டீபன்ராஜ் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டாா். அவரை ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே, ஸ்டீபன்ராஜ் மருத்துவமனையில் இருந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலா்கள் சசி, ராமஜெயம், வினோத் ஆகிய 3 பேரைையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

