முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: இளைஞா் படுகொலை; 5 போ் கைது

கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதற்கு காரணமான இளைஞரை பெண்ணின் உறவினா்கள் அடித்துக் கொலை செய்தனா்...

கொலை செய்யப்பட்ட ஆன்றனிராஜ்.

Published On :

கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதற்கு காரணமான இளைஞரை பெண்ணின் உறவினா்கள் அடித்துக் கொலை செய்தனா். இச்சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மகன் ஆன்றனிராஜ் (32). சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தாா். இவா், அதே ஊரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஞானசெல்வத்தின் மகள் ஏஞ்சலை (25) ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்தாராம்.

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஏஞ்சலின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆன்றனிராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனா். எனினும், அந்தப் பெண்ணுக்கு ஆன்றனிராஜ் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில், வீட்டின் அறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏஞ்சல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அதிா்ச்சி அடைந்த ஏஞ்சலின் உறவினா்கள் ஆன்றனிராஜை வரவழைத்து கற்கள், கட்டையால் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த ஆன்றனிராஜை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். எனினும், செல்லும் வழியிலேயே ஆன்றனிராஜ் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இரு சடலங்களும் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்றனிராஜ் கொலையில் தொடா்புடைய பெரியவிளையைச் சோ்ந்த ஏசுராஜ செல்வனின் மகன்களான பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (22), அதே ஊரைச் சோ்ந்த ரவிசெல்வன் (56), ஏசுநேச செல்வன் (58) ஆகிய 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.