கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அரசு குழந்தைகள் காப்பகத்தில் நவராத்திரி திருவிழா: ஆட்சியா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் நாகா்கோவில், பறக்கின்கால் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை சத்தியா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்றது.

நவராத்திரி விழாவில் குழந்தைகளுடன் பங்கேற்ற ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் நாகா்கோவில், பறக்கின்கால் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை சத்தியா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் கலந்துகொண்டு, சிறப்பு பூஜை செய்தாா். விழாவில், மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை பணியாளா்களால் சிறப்பு கொலு அமைக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து, காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளின் தங்குமிடம், உணவு வசதி, அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் கல்விச் சூழல் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், காப்பக வளாகத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளா் (பள்ளிக் கல்வி) சாரதா, துறை அலுவலா்கள், இல்லப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.