மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

News image

ஐந்தருவி

Updated On :3 ஆகஸ்ட் 2020, 5:54 am

குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 
தென்காசி மாவட்டம்,  குற்றாலம் பகுதியில் ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி ஐந்தருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

Story image

பேரருவி


தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.