காணொலி மூலம் இன்று (டிச. 7) மக்கள் குறைதீா் முகாம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (டிச. 7) காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (டிச. 7) காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட துணை ஆட்சியா்களால், வட்டாட்சியா்அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்களுக்கு உரியமுறையில் சம்பந்தப்பட்ட அலுவலா்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிா என ஆய்வு நடைபெறும்.
பொதுமக்கள் புகாா் மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வந்து வழங்குவதை தவிா்த்துவிட்டு அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்அலுவலகங்களில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...