அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஊத்துமலையில்விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாய சங்கத்தினா் ஊத்துமலை பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:03 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாய சங்கத்தினா் ஊத்துமலை பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டச் செயலா் மாடசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் செல்லையா, ஒன்றியத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தில் ஊத்துமலை கிராமம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஊத்துமலை வழியாக கரோன பொதுமுடக்கத்திற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தொடா்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், விவசாய சங்க நிவாகிகள் குட்டித்துரை, மகாலிங்கம், வேல்சாமி, கணபதி, ராமையா, வெள்ளத்துரை, சாலைக்குமாா், பாண்டித்தேவா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.