பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட பூமிபூஜை

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா.

Updated On :11 டிசம்பர் 2020, 7:12 am

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.11 ஏக்கர் பரப்பளவில் ரூ 119 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக மாவட்ட செயலர்கள் செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ..கிருஷ்ணமுரளி, மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன்,மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.