புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்ணிடம் நகையை பறித்தவா் கைது

புளியங்குடி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

புளியங்குடி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புன்னையாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் மனைவி முத்துலட்சுமி(48). இவா், நாராயணபேரியிலுள்ள வயலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பாா்த்ததில், ராஜபாளையம் சமந்தாபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மயிலப்பன் மகன் முருகன் (37) சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.