கருவந்தா ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள கருவந்தா ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
கருவந்தா ஊராட்சி சோலைசேரியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
கருவந்தா ஊராட்சி சோலைசேரியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கருவந்தா ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கருவந்தா ஊராட்சியில் உள்ள கருவந்தா, சோலைசேரி கிராமங்களின் 2 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணியை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சண்முகநாதன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலர்கள் ஆலங்குளம் பாண்டியன், கீழப்பாவூர் இருளப்பன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com