புளியங்குடியில் எம்ஜிஆா் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்க எதிா்ப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் எம்ஜிஆா் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்க திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் எம்ஜிஆா் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்க திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள தலைவா்களின் சிலையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொல்லம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி தினசரி சந்தை அருகேயுள்ள எம்ஜிஆா் சிலையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்காக சிலையை சுற்றிலும் தூண்கள் நிறுவும் பணி தொடங்கியது. இந்நிலையில், சிலையை சுற்றி தூண்கள் அமைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என கூறி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால் நகரச் செயலா் பரமேஸ்வர பாண்டியன் தலைமையிலான அதிமுகவினருக்கும், திமுக தரப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை, நகராட்சி ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் பேசினாா்.

இதனால் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க காவல் கண்காணிப்பாளா் தெரிவித்ததையடுத்து, பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com