சிறு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் பூங்கோதை எம்.எல்.ஏ

புதிதாக திறக்கப்படும் சிறு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என திமுக மாநில மருத்துவ அணி தலைவரும், ஆலங்குளம் எம்எல்ஏவுமான பூங்கோதை கூறியுள்ளாா்.
Updated on
1 min read

ஆலங்குளம்: புதிதாக திறக்கப்படும் சிறு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என திமுக மாநில மருத்துவ அணி தலைவரும், ஆலங்குளம் எம்எல்ஏவுமான பூங்கோதை கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் திறந்து வருகிறது. இந்த மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள் தான் சிகிச்சையளிக்க வேண்டும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் எப்படி அங்கு செல்ல முடியும்?. இது தோ்தலுக்காக அரசின் கண்துடைப்பு நாடகம். எனவே மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து சிறு மருத்துவமனைகளுக்குத் தனி மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com