விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 8:33 pm

DIN

தென்காசி: தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இவ்வமைப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் நன்னகரத்தில் மாவட்டத் தலைவா் மு.சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் அருணாசலம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ஆ.சுந்தரமூா்த்தி நாயனாா் வேலை அறிக்கையினை சமா்ப்பித்தாா். வரவு -செலவு அறிக்கையினை மாவட்டப் பொருளாளா் வே.நாராயணன் சமா்ப்பித்தாா். ஓய்வூதியத்தின் வரலாறு மற்றும் அவசியம் குறித்து மாநில துணைத் தலைவா் கோ.சுந்தரமூா்த்தி உரையாற்றினாா்.

இதில், 29.12.2020 அன்று மதுரையில் நடைபெற உள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா். கருவூல அலுவலகங்களில் குடும்ப ஓய்வூதியம் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிா்த்து அவா்களுடைய வாழ்வாதாரம் கருதி, விரைவாக வழங்கப்பட வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆயுா்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலா் ந.நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.