பாவூர்சத்திரம் பகுதியில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்.

ரஜினியை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக அழைத்து வருகின்றனர். அவரது செயல்பாடுகள் பல்வேறு காலக்கட்டங்களில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் எழுதியதாக ஒரு கடிதம் இணையதளத்தில் வேகமாக பரவியது.
அந்த கடிதம் தன்னுடைய கடிதம் இல்லை என்றாலும், அதில் உள்ள தனது உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் சுவரொட்டிள் மூலமும், இணையதளங்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் அவரது ரசிகர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வருங்கால தலைமுறை வாழ வேண்டுமென்றால் நீங்கள் ஆளவேண்டும். 'ஓட்டுனு போட்டா ரஜினி சாருக்கு தான்" .மக்கள் உங்கள் பக்கம் தான், வா தலைவா வா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
திடீரென ரஜினி ரசிகர்களால் ஓட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...