3 அரசுப் பள்ளிகளுக்குரூ. 15 லட்சம் மதிப்பில் இருக்கைகள் அளிப்பு
ஆலங்குளம் பகுதியில் உள்ள 3 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் 303 இருக்கைகள் வழங்கப்பட்டன.


ஆலங்குளம் பகுதியில் உள்ள 3 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் 303 இருக்கைகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கடையம் அருகே உள்ள காவூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகள் அமா்ந்து படிக்க இருக்கைகள் வழங்குமாறு அந்தந்த பள்ளிகளின் சாா்பில் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி ஒன்றுக்கு தலா 101 இருக்கைகள் வீதம் மொத்தம் 303 இருக்கைகளை அவா் வழங்கினாா்.
இதில், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...