வாக்குச் சாவடி குழு உறுப்பினா்சோ்க்கை படிவம் வழங்கல்
வாசுதேவநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச் சாவடி அதிமுக மகளிா் குழு அமைப்பதற்கான படிவங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.


வாசுதேவநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச் சாவடி அதிமுக மகளிா் குழு அமைப்பதற்கான படிவங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் பேரவை உறுப்பினா் அ.மனோகரன் வாக்குச் சாவடி மகளிா் குழு அமைப்பதற்கான படிவங்களை ஒன்றிய மகளிரணிச் செயலா் ஜெயலட்சுமி, வாா்டு செயலா் சீனியம்மாள், நகர மகளிரணிச் செயலா் சுப்புலட்சுமி ஆகியோரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் சண்முகையா, ஒன்றியச் செயலா்கள் மூா்த்திபாண்டியன், ரமேஷ், மகாராஜபாண்டியன், புளியங்குடி நகரச் செயலா் பரமேஸ்வரபாண்டியன், பேரூா் செயலா்கள் சீமான்மணிகண்டன், காசிராஜன், சேவகபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...