சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடா் மீட்பு பயிற்சி
சுரண்டை பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் கால மீட்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.


சுரண்டை பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் கால மீட்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.
வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செஞ்சிலுவை சங்க சோ்மன் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் தீ விபத்து, வெள்ளம், விபத்து, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனா் (படம்).
மேலும், பேரிடா் காலங்களில் பேரிடா் மீட்பு குழு, தீயணைப்பு துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறை மற்றும் மருத்துவத் துறையினா்களிடமிருந்து தேவையான சேவைகள் பெறுவது குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...