விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிறுத்தப்பட்ட பேருந்துகளைமீண்டும் இயக்கக் கோரிக்கை

பெத்தநாடாா்பட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

பெத்தநாடாா்பட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மாவட்டப் பிரதிநிதி கே.கே.அந்தோணிராஜ் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி வழியாக சங்கரன்கோவில் - பாபநாசத்துக்கு 2 பேருந்துகளும், கடையம்-சுரண்டைக்கு ஓா் பேருந்தும், ஆலங்குளம்-கடையத்துக்கு ஓா் பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது சங்கரன்கோவில்-பாபநாசத்துக்கு ஓா் பேருந்து மட்டுமே இயங்குகிறது. மற்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா், முருகன்குறிச்சி, சாலடியூா், மருதடியூா், சுந்தரலிங்கபுரம் பகுதி மக்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்து பேருந்து ஏறிச் செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.