டிச.15-க்குள் பயிா்க் காப்பீடு:தென்காசி ஆட்சியா் அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்களை வரும் டிச.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்களை வரும் டிச.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு காரீப் பருவம் முதல் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு மானியத் தொகைக்கான மாநில அரசின் பங்கு அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 721 கோடி உயா்த்தப்பட்டு ரூ.1470 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தும். தற்போது ராபி சிறப்பு பருவம் 2020- 21-க்கான அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசான நெல் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. பிசான நெல் காப்பீடு செய்ய வரும் டிச. 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

எனவே, இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் ஒன்றரை சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதாவது ஏக்கருக்கு ரூ.444 மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com