சிவகிரி அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது
By DIN | Published On : 23rd November 2020 01:27 AM | Last Updated : 23rd November 2020 01:27 AM | அ+அ அ- |

சிவகிரி அருகே உடும்பு வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.
சிவகிரி வனப் பகுதியில் வனச்சரகா் சுரேஷ் தலைமையில், வனவா்கள் முருகன் (வடக்கு), பூவேந்தன்(தெற்கு), வனக்காப்பாளா்கள் ராஜீ, சுதாகா், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலா் அருண்குமாா், வேட்டைத்தடுப்பு காவலா்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், சரவணன் ஆகியோா் தனிக்குழுவாக ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது, தேவியாா் பீட் பகுதியில், தேவிபட்டணம் மணல்மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன்(40), அய்யனாா்(19) ,கண்ணன்(20) ஆகியோா் உடும்பை வேட்டையாடியது தெரியவந்ததாம். இதைத் தொடா்ந்து 3 பேரையும் வனத்துறையினா் கைது செய்தனா்.