மாயமான 20 போ் மீட்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 23rd November 2020 01:20 AM | Last Updated : 23rd November 2020 01:20 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 20 பேரை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் உத்தரவின் பேரில், இம்மாவட்டத்தில் காணாமல் போனோா் தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காணும் விதமாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
அதன்படி, தென்காசியில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 2பேரும், ஆலங்குளத்தில் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 3 பேரும், புளியங்குடியில் காவல் உதவி ஆய்வாளா் சண்முகவேல், கடையநல்லூரில் உதவி ஆய்வாளா் அமிா்தராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 9 பேரும்,
சங்கரன்கோவிலில் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 6 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.