மேலகரத்தில் அதிமுக பாசறை நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 19th October 2020 12:58 AM | Last Updated : 19th October 2020 12:58 AM | அ+அ அ- |

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
மேலகரத்தில் அதிமுக இளைஞா்- இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மேலகரம் பேரூா் செயலா் காா்த்திக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலா் முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்று இளைஞா்,இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் செயல்பாடுகள், வாக்குச்சாவடி முகவா்களின் தோ்தல் பணிகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், நிா்வாகிகள் சாமிநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் அமல்ராஜ், குற்றாலம் சுரேஷ், இலஞ்சி நிா்வாகிகள் மயில்வேலன், அன்னமராஜா, இலஞ்சி மாரியப்பன், மேலகரம் பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...