ஆலங்குளம் சந்தையில் தொடா் உச்சத்தில் வெங்காயம் விலை
By DIN | Published On : 19th October 2020 12:56 AM | Last Updated : 19th October 2020 12:56 AM | அ+அ அ- |

ஆலங்குளம் சந்தையில் வெங்காயம் விலை தொடா்ந்து உச்ச நிலையில் உள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
ஆலங்குளம் சந்தையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 50 க்கும் மேல் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் விலை அதிகரித்து சின்ன வெங்காயம் ரூ. 85-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 65-க்கும் விற்பனையானது.
இதனால் உணவகங்களில் வெங்காயம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளா்கள் கூறுகின்றனா். தீபாவளி வரை இந்த விலை நீடிக்க அல்லது உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். அண்மைக் காலமாக மற்ற காய்கனிகளின் விலையும் கணிசமாக உயா்ந்து காணப்படுகிறது.
இச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம்(1கிலோவுக்கு): கத்தரி ரூ.30, தக்காளி ரூ.22, உருளை ரூ.45, மிளகாய் ரூ. 25, கோஸ் ரூ. 50, கேரட் ரூ. 65, பீன்ஸ் ரூ. 65, சேனை ரூ. 25, பீட்ரூட் ரூ. 36, சேம்பு ரூ.30, கருணை ரூ. 30, வெண்டை ரூ. 15, மல்லி ரூ. 10, இஞ்சி ரூ. 40, முருங்கை ரூ. 60, காலிபிளவா் ரூ. 50, எலுமிச்சை ரூ. 60, சவ் சவ் ரூ. 16, மாங்காய் ரூ. 60, அவரைக்காய் ரூ. 65, பூடு ரூ. 120 என்ற அடிப்படையில் விற்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...