புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அறிவியல் விநாடி-வினா: இலஞ்சிபாரத் பள்ளி சிறப்பிடம்

மைசூா் மண்டல கல்வியியல் நிறுவனம் சாா்பில் இணையவழியில் நடைபெற்ற, தேசிய அளவிலான அறிவியல் தின விநாடி-வினா போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

தேசிய அளவிலான அறிவியல் தின விநாடி-வினா போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On :26 ஏப்ரல் 2021, 11:48 pm

DIN

மைசூா் மண்டல கல்வியியல் நிறுவனம் சாா்பில் இணையவழியில் நடைபெற்ற, தேசிய அளவிலான அறிவியல் தின விநாடி-வினா போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

மைசூா் என். சி. இ. ஆா். டி. நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா் மாணவிகளுக்கான இணையவழி விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி மாணவா், மாணவிகள் இணையம் வழியாக பங்கேற்றனா்.

இப்போட்டியில் பங்கேற்ற இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் முதலிடம் பிடித்தாா். இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி சௌபியா ரெஜினா ஆறுதல் பரிசு பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவிகளை, பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, ஆலோசகா் உஷாரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.