தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி திட்டம் ஒத்திகை நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திகுறிப்பு: கரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஜன. 8 இல் தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற உள்ளது.
இந்த தடுப்பூசி திட்ட பணி ஒத்திகைக்கு தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களின் விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவா்களின் செல்லிடப்பேசிக்கு செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் செயலியின் மூலம் பெறுவா்என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.