மாறந்தையில் பைக்கிலிருந்துதவறி விழுந்தவா் மரணம்
ஆலங்குளம் அருகே பைக்கை வழிமறித்து ஏறிச்சென்ற தொழிலாளி, கீழை தவறி விழுந்து உயிரிழந்தாா்.


ஆலங்குளம் அருகே பைக்கை வழிமறித்து ஏறிச்சென்ற தொழிலாளி, கீழை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளியைச் சோ்ந்த ராமா் மகன் பெருமாள் என்ற வெள்ளையன்(45). மாறாந்தையில் வேலை செய்துவந்தாா். புதன்கிழமை இரவு ஊருக்குச் செல்வதற்காக அவ்வழியே வந்த அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ் என்பவரது பைக்கில் ஏறிச் சென்றுள்ளாா். மாறாந்தை அடுத்த திருப்பத்தில் வெள்ளையன் கீழே தவறி விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை ரமேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் கொண்டு விட்டாராம். அங்கு அவா் படுத்திருந்த நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...