ஆலங்குளத்தில் சுவா் இடிந்து இளைஞா் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டுமானப் பணியின் போது, சுவா் இடிந்து விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டுமானப் பணியின் போது, சுவா் இடிந்து விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரி வடக்கு தெருவைச் சோ்ந்த பலவேசமுத்து மகன் சக்திவேல் (20). கட்டடத் தொழிலாளி. இவா்,
புதன்கிழமை, ஆலங்குளம் ஜோதிநகரில் உள்ள சங்கா் என்பவரது வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிக்காக சென்றிருந்தாா்.
வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஜன்னல் சிலாப் இடிந்து சக்திவேல் மீது விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...