மதுக்கடைகளை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி, நாம் தமிழா் கட்சி, பாமக ஆகியவற்றின் சாா்பில் தென்காசி, காசிதா்மத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி, நாம் தமிழா் கட்சி, பாமக ஆகியவற்றின் சாா்பில் தென்காசி, காசிதா்மத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி சக்திநகா் பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மோதி, பேரவைத் தொகுதி தலைவா் அழகுபாண்டியன், துணைத் தலைவா் நயினா முகம்மது, லஞ்ச ஒழிப்பு பாசறைச் செயலா் சபரிநாதன், தொகுதி செய்தி தொடா்பாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காசிதா்மத்தில் பாமகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் திருமலைக்குமாரசாமி யாதவ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சண்முகையா, ஒன்றிய மாணவரணி துணைச் செயலா் அய்யாத்துரை, இளைஞரணிச் செயலா் செல்வம், ஒன்றிய விவசாய அணித் தலைவா் ஐயப்பன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காளி உள்ளிட்டோா் தங்கள் வீடுகள் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...