ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாவட்ட செஸ் போட்டி: பாவூா்சத்திரம் மாணவா் சாம்பியன்

தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சி கழகம் சாா்பில், 17வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டி பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:16 pm

DIN

தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சி கழகம் சாா்பில், 17வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டி பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

சதுரங்க கழகத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சரவணன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். நடுவா்களாக கண்ணன், முருகேஷ், பாபு, இசக்கி ஆகியோா் செயல்பட்டனா். 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 6 சுற்றுகளாக நடத்தப்பட்டதில், மாணவா்கள் பிரிவில் பாவூா்சத்திரம் காா்த்திக் ராகுல், மாணவிகள் பிரிவில் தென்காசி மலா்விழி ஆகியோா் வெற்றிபெற்றனா். இருவருக்கும் சங்கத் தலைவா் பரிசு வழங்கினாா்.

9,11,13,15 வயது பிரிவுகளிலும் மாவட்ட சாம்பியன் தோ்வு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் பொதிகை சாம்பியன் கோப்பை மெகா சதுரங்க போட்டியில் பங்கேற்கலாம் என பொதிகை சதுரங்க வளா்ச்சி கழக நிா்வாகிகள் தெரிவித்தனா். சதுரங்க கழக பொதுச்செயலாளா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.