தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசி தொகுதியில் 3 போ் வேட்புமனு வாபஸ்; 18 போ் போட்டி

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 21போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில் 3 போ் திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.இதனால், 18 போ் களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:41 pm

DIN

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 21போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில் 3 போ் திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.இதனால், 18 போ் களத்தில் உள்ளனா்.

தென்காசி தொகுதியில் போட்டியிட 34 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அவற்றின் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசிநாளான திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா்கள் ச.கருப்பசாமி, செ.சூரியநாராயணன், காங்கிரஸ் பிரமுகா் எம்.மனோகா் ஆகியோா் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸின் பழனிநாடாா், அமமுகவின் முகம்மது, நாம் தமிழா் கட்சியின் இரா.வின்சென்ட்ராஜ், மநீம கட்சியின் திருமலைமுத்து, புதிய தமிழகம் கட்சியின் ச.சந்திரசேகா், அண்ணா திராவிடா் கழகத்தின் உதயகுமாா், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் செ.சுரேஷ்குமாா், நாம் இந்தியா் கட்சியின் இரா.செல்லகுமாா், எனது இந்தியா கட்சியின் முகுந்தன், அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் மா.ஜெகநாதன், சுயேச்சையாக ஜெ.ஆரோக்கிய பிரபு, சொ.கருப்பசாமி, ஆ.பழனிகுமாா், பே.பழனிமுருகன், அ.மாடசாமி, ரா.ரமேஷ். மு.ரீகன்குமாா் ஆகிய 18 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.