தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புளியரையில் புதிய காவல் சோதனைச் சாவடி

கேரளத்திலிருந்து கழிவு பொருள்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வசதியுடன் புளியரையில புதிதாக காவல் சோதனைச் சாவடி 

News image
Updated On :22 மார்ச் 2021, 7:46 pm

DIN

தமிழக-கேரள எல்லையில் புளியரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளத்திலிருந்து கழிவு பொருள்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வசதியுடன் புளியரையில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் சோதனைச் சாவடி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து திறந்துவைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் முன்னிலை வகித்தாா். தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் அரிகரன், புளியரை காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஞான ரூபி பரிமளா, முருகேசன் மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.