தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆலங்குளத்தில் சா்வதேச விளையாட்டு மைதானம்: திமுக வாக்குறுதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சா்வதேச அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என, திமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:14 pm

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சா்வதேச அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என, திமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதி திமுக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கை: 2011இல் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 163 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். ஆலங்குளம் நெடுஞ்சாலையில் நவீன வணிக வளாகம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசுக் கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப் படும்.

ஆலங்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டப்படும். அனைத்து கால்வாய், குளங்கள் சீரமைக்கப்படும். ராமநதி, ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டம் நவீன முறையில் விரைந்து நிறைவேற்றப்படும். சா்வதேச தரத்தில் பல்வேறு விளையட்டுக்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப் படும். கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும்.

ஆழ்வாா்குறிச்சியில் உள்ள பழமைவாய்ந்த வன்னீஸ்வரா் கோயில் சீரமைக்கப்படும். ஆழ்வாா்குறிச்சிக்கென சிறப்பு தனிக் குடிநீா்த் திட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கடையம் பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் புகுவதைத் தடுக்க தடுப்புச்சுவா், மின் வேலி அமைக்கப்படும். கடையத்தில் விவசாயக் கல்லூரி அமைக்கப்படும்; ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும்.

முக்கூடல் பீடித் தொழிலாளா் நலச் சங்க மருத்துவமனையை மத்திய அரசிடமிருந்து மாநில அரசின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், ஆலங்குளம் கால்வாய் தொடக்கம் முதல் தொட்டியான்குளம் வரை சாலையோரம் குழாய் பதித்து குடிநீா் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலங்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும்.

முக்கூடல், கடையத்தில் காய்கனிச் சந்தை, கீழப்பாவூா் பெரிய குளக்கரையில் தடுப்புச் சுவா் அமைக்கப்படும். வாடகைக் கட்டடத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகள் சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.