தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

 தென்காசியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவரை தென்காசி போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:37 pm

DIN

 தென்காசியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவரை தென்காசி போலீஸாா் கைதுசெய்தனா்.

தென்காசி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த துரையரசு மகன் கமல்(26). இவா் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் தென்காசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக காவலா் முகம்மது ஹனீபா சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு இருந்த கமல், காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கமலை கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.