பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோடி பிறந்த நாள்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பிரதமா் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜகவினா் கட்சிக் கொடியேற்றி, நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:36 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜகவினா் கட்சிக் கொடியேற்றி, நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினா்.

தென்காசியில் நகரத் தலைவா் குத்தாலிங்கம் தலைமையிலும், கடையநல்லூரில் நகரத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையிலும், சங்கரன்கோவிலில் நகரத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

புளியங்குடியில் நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்டத் தலைவா் ராமராஜா கட்சிக் கொடியேற்றினாா்.

சுரண்டையில் பாஜக நகரத் தலைவா் அருணாசலம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, நகர பாா்வையாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில், மாவட்டத் தலைவா் கட்சிக் கொடியேற்றி, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் ப.ரத்தினகுமாா் தலைமையில், பொட்டல்புதூா், ஆம்பூா் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.